செருமேனியம் அயோடைடு

செருமேனியம் அயோடைடு (Germanium iodide) என்பது செருமானியமும் அயோடினும் சேர்ந்து உருவாகும் வேதிச்சேர்மம் ஆகும். இத்தகைய வேதிச் சேர்மங்கள் இரண்டு காணப்படுகின்றன. மற்றும் செருமேனியம்(IV) அயோடைடு என்பன இவ்விரண்டு அயோடைடுகளாகும்[1]. செருமேனியம்(II) அயோடைடு ஒரு படிகத் திண்மம் ஆகும். உருகும்போது இது சிதைவடைகிறது. செருமேனியம் அயோடைடின் தன்னீர்ப்பு அடர்த்தி 5.37 ஆகும். வெற்றிடத்தில் 240 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது பதங்கமாகிறது.

செருமானியம்(IV) அயோடைடும் ஒரு படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. 144 ° செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. 440 ° செல்சியசு வெப்பநிலையை கொதிநிலையாகக் கொண்டுள்ளது. மேலும் இதனுடைய தன்னீர்ப்பு அடர்த்தி 4.32 ஆகும்.

மேற்கோள்கள்

  1. Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!