டிசம்பர் 16, 1944ல் ஐரோப்பாவின் மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடிக்க ஜெர்மனி பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலின் குறிக்கோள் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்றுவதாகும். பல்ஜ் போர்முனையின் மையைக்களத்தில் சென் வித் நகர் ஜெர்மானியப் படைகளின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருந்தது. பெல்ஜிய சாலைப் பிணையத்தில் முக்கிய இடத்தில் இந்நகரம் அமைந்திருந்தால் இதனைக் கைப்பற்றுவது ஜெர்மானியர்களுக்கு அவசியமானது. சென் வித்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் ஐந்து நாட்கள் ஜெர்மானியத் தாக்குதலை சமாளித்தன. ஆனால் டிசம்பர் 21ம் தேதி நகரைச் சுற்றியிருந்த அரண் நிலைகளுக்குப் பின் வாங்கின. அடுத்த இரு நாட்களில் ஜெர்மானியப் படைகள் அமெரிக்கப் படைநிலைகளைப் பக்கவாட்டிலிருந்து ஊடுருவி விட்டதால், அமெரிக்கர்கள் நகரையும் அதன் சுற்றுபுறங்களையும் விட்டுப் பின்வாங்கினர். சென் வித் ஜெர்மானியர் வசமானது. ஆனால் ஆறு நாட்கள் நடந்த இச்சண்டை, ஜெர்மானிய தாக்குதல் கால அட்டவணையில் தாமதமேற்படுத்திவிட்டது. பல்ஜ் தாக்குதலை முறியடித்தபின்பு ஜனவரி 30 - பெப்ரவரி 1, 1945ல் நேச நாட்டுப் படைகள் சென் வித் நகரை ஜெர்மானியர் வசமிருந்து மீட்டன.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!