கில் செப்டம்பர் 8, 1999 இல் பசில்கா, பஞ்சாபில் பிறந்தார். இவரின் தந்தை லக்விந்தர் சிங் துடுப்பாட்ட வீரராக வேண்டும் என விரும்பினார். ஆனால் அது நிறைவேறாமல் போகவே தனது மகனை துடுப்பாட்ட வீரராக்க நினைத்தார். பின் பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கிற்கு அருகில் வாடைக்கு குடிபெயர்ந்தனர்.[4]
மூன்று வயது முதல் துடுப்பாட்டம் விளையாடியதாகவும், அந்தக் காலகட்டத்தில் பொம்மைகள் வேண்டாமென்று மட்டை மற்றும் பந்துகள் கேட்டதாகவும் அதனுடனே தூங்கியதாகவும் இவரது தந்தை லக்வந்தர் சிங் கூறினார்.[5]
சர்வதேச போட்டிகள்
பெப்ரவரி, 2017இல் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார்.[6][7][8] 2019இல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இவர் சர்வதேச ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[9] ஆகத்து 2019 இல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் மிக இளம் வயதில் இரு நூறு ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.[10] பிரையன் லாரா அகாதமியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 204 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் 334 நாட்கள் ஆகும்.[11] தென்னாப்பிரிக்கட் துடுப்பாட்ட அ னிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால், விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.[12] நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அ அணியின் தலைவரானார்.[13]
சான்றுகள்
↑"Shubman Gill". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)