சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
இந்த நகரம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். மலேசிய இந்தியத் தலைவர்களில் சிலரின் அரசியல் வாழ்க்கையை உறுதி செய்த நகரம் என்றும் இதற்கு ஓர் அடைமொழி உண்டு. மலேசியா விடுதலை பெற்றதில் இருந்து இந்தத் தொகுதி இந்தியர்களின் அரசியல் கோட்டையாக இருந்து வருகிறது.
வரலாற்றுத் தலைவர்கள்
மலேசிய அரசியலில் முக்கியமான தலைவர்கள் சிலரை உருவாக்கிக் கொடுத்த பெருமை இந்த சுங்கை சிப்புட் நகரத்தைச் சாரும். அமரர் துன் சம்பந்தன், துன்சாமிவேலு, டாக்டர் ஜெயகுமார் தேவராஜ், துன் லியோங் இயூ கோ, தோக் பாங்கு அமீட் போன்றவர்கள் இந்த நகரில் இருந்து தான் தேசிய அளவில் பிரபலம் அடைந்தனர்.
மலேசிய விடுதலை பெற, நாட்டின் மூன்று முதன்மைத் தலைவர்கள் இலண்டனுக்குச் சென்று விடுதலை உடன்படிக்கையில் (Merdeka Agreement) கையெழுத்திட்டனர். அந்த மூவரில் இந்தியர்களின் தலைவராக துன் சம்பந்தன் கையெழுத்திட்டார். இது மலேசிய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி ஆகும்.[8][9]
1960-ஆம் ஆண்டுகளில், மலேசிய இந்தியர்களை ஒன்றுபடுத்தி அவர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் பத்து வெள்ளி சேகரித்தார். அந்த முதலீட்டைக் கொண்டு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தைத் தோற்றுவித்தார். தற்போது இந்தச் சங்கம் ஆசியாவிலேயே தலைசிறந்த கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது.[10]
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி
சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை
தொகுதி
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
1958-ஆம் ஆண்டில் கிந்தா உத்தாரா மக்களவைத் தொகுதியில் இருந்து சுங்கை சிப்புட் தொகுதி உருவாக்கப்பட்டது