சிராப்பள்ளி

சிராப்பள்ளி என்னும் ஊரின் பெயரோடு திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் தோன்றியது.

மக்கள் மிகுதியாக உறைவிடமாய்க் கொண்டிருந்த ஊர் உறையூர். இந்த உறையூர் சங்க காலச் சோழர்களின் தலைநகரம். இதன் கிழக்கில் இருந்த நெடும்பெருங்குன்றம் பற்றிக் குறுங்குடி மருதனார் என்னும் சங்க காலப் புலவர் குறிப்பிட்டுள்ளார்.[1] இந்தக் குன்றம் இக்காலத்தில் மலைக்கோட்டை என்னும் பெயரைப் பூண்டுள்ளது.

உறந்தை என்னும் உறையூரில் கறங்கிசை-விழா நடைபெறுமாம்.
கொட்டுமுழக்கத்துடன் நடைபெறுவது கறங்கிசை விழா.
இங்கு நடந்த பங்குனி-முயக்கம் என்னும் விழாவை வேறு பாடல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த உறையூருக்குக் கிழக்கேயிருந்த நெடும்பெருங் குன்றத்தில் காந்தள் பூக்கள் மிகுதியாம். பருவ-மகளிர் உடலில் தோன்றும் நறுமணம் இந்தக் காந்தள் மலரின் மணம் போல இருக்குமாம்.

அடிக்குறிப்பு

  1. கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
    நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்
    போது அவிழ் அலரின் நாறும்
    ஆய்தொடி அரிவை – அகநானூறு 4

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!