புதிய ஏற்பாட்டில் யாக்கோபு என்னும் பெயர் பலருக்கு வழங்கப்பட்டுகின்றது. மாற்கு நற்செய்தியில் இவரின் தாய் மரியா எனவும், இவருக்கு யோசே என்னும் ஒரு சகோதரர் இருப்பது தெரிகின்றது.[1] விவிலியத்தின் பிற இடங்களில் யாக்கோபுவின் தாய் மரியா என்னும் நபரைப்பற்றிக்குறிப்புகள் இருப்பினும், சின்ன யாக்கோபுவின் தாய் என குறிப்புகள் இல்லை.