சரத்சந்திர சங்கர் சிறீகாந்த் (Sharadchandra Shankar Shrikhande, பிறப்பு: 19 அக்டோபர் 1917) ஒரு இந்திய கணிதவியலாளராவார். சேர்வியல் கணிதவியலில் பல அாிய சாதனைகள் நிகழ்த்தியதால் நன்கு பிரபலமானார். 1782 இல் லியோன்ஹார்ட் ஆய்லர் என்பவரால் வெளியிடப்பட்ட புகழ் பெற்ற பிரபலமான முன்னறிகூற்றை ஆர்.சி. போஸ், ஈ. டி. பார்கர் ஆகியோருடன் சேர்ந்து தவறென நிரூபித்தார். அதாவது ஒவ்வொரு n க்கும் 4n + 2 வரிசையிலான இரண்டு ஒன்றுக்கொன்று செங்குத்தான இலத்தீன் சதுரங்கள் இல்லையென நிரூபித்தார்.[1] கலவையியல் மற்றும் புள்ளிவிவர வடிவமைப்புகள் இவரின் சிறப்புகள் ஆகும். ஸ்ரீகாந்த் வரைபடம்[2] புள்ளிவிவர வடிவமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
1950 ஆம் ஆண்டில் ஸ்ரீகாந்த், ஆா். சி. போஸ் என்பவாின் மேற்பார்வையில் தனது முனைவர் பட்டத்தை அமொிக்காவின் சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலைனா பல்கலைக்கழகத்தில் பெற்றார். அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் கற்பிக்கும் பணியை மேற்கொண்டாா்.[3] பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையின் தலைவராகவும், மும்பை Center of Advanced Study in Mathematics இன் தலைவராகவும் 1978இல் அவர் ஓய்வு பெறும் வரையிலும் பணியாற்றினார். இந்திய தேசிய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கழகம், மற்றும் அமெரிக்காவின் கணிதவியல் கழகம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்துள்ளார்.
இவரின் மகன் மோகன் ஸ்ரீகாந்த்[4] அமொிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்