கூகுள் புத்தகங்கள் அல்லது கூகுள் புக்ஸ் என்பது கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவை. இதன் மூலம் உரை மாற்றப்பட்ட தேடும் வகையிலான மென்னூல்களை இணையத்தில் படிக்கலாம். இது அக்டோபர் 2004 இல் ஃபிராங்க்ஃபர்ட் புத்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் கூகுள் புத்தகத் தேடல் என அறியப்பட்ட கூகுள் நூலகத் திட்டம்டிசம்பர் 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
2010 ஆம் ஆண்டில் இச்சேவையின் கீழ் உலகின் 130 மில்லியன் தனிப்பட்ட புத்தகங்கள் (129,864,880 சரியாக) உள்ளன என்று மதிப்பிடப்பட்டது.[1][2] அக்டோபர் 14, 2010 இல் கூகுள் மூலம் வருடி (Scan) பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை 15 மில்லியன் என்று அறிவிக்கப்பட்டது.[3] பெரும்பாலான வருடி பதிவேற்றப்பட்ட புத்தகங்கள் அச்சுக்கு உகந்ததாகவும் வணிக ரீதியிலும் இல்லை. [4]
குறிப்புகள்
↑"Books of the world". கூகுள். August 5, 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-15. After we exclude serials, we can finally count all the books in the world. There are 129,864,880 of them. At least until Sunday.