22px|border சிலாங்கூர்{{SHORTDESC:22px|border சிலாங்கூர்|noreplace}}
கிளானா ஜெயா, (மலாய்: Kelana Jaya; ஆங்கிலம்: Kelana Jaya; சீனம்: 格拉那再也); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள புற நகர்ப் பகுதி.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள SS3, SS4, SS5, SS6 மற்றும் SS7 ஆகிய குடியிருப்புப் பிரிவுகளை உள்ளடக்கியது. டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை இந்தப் பகுதியின் வழியாகச் செல்கிறது. பிரபலமான பாரடிகம் மால் (Paradigm Mall) எனும் பேரங்காடியும் இங்கு அமைந்துள்ளது.
சுபாங் ஜெயா; கிளானா ஜெயா போன்ற பகுதிகளை எஸ்.எஸ். (SS) என்று வகைப்படுத்தி உள்ளார்கள். எஸ்.எஸ்.என்பது சுங்கைவே - சுபாங் (Sungai Way-Subang) என்பதன் சுருக்கம் ஆகும். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முகவரிகள் தரப்படுத்தப் பட்டுள்ளன. பெட்டாலிங் ஜெயா நகரம் எண்ணிடப்பட்ட பிரிவுகளாக (செக்சன்) பிரிக்கப்பட்டு உள்ளது.[1]
கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 10 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள் டாமன்சாரா, பத்து தீகா, கெப்போங், சிகாம்புட் பூச்சோங், சா ஆலாம் மற்றும் கிள்ளான்.
பொது
கிளானா ஜெயாவில் ஏராளமான பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. கிளானா ஜெயாவின் ஒரு முக்கிய ஈர்ப்பு எஸ்.எஸ்.7 (SS7) வீடமைப்புப் பகுதியில் உள்ள கிளானா ஜெயா ஏரிப் பூங்கா ஆகும்.[2]
பெட்டாலிங் ஜெயாவின் பிற பகுதிகளில் இருந்தும், அண்டை நகரமான சுபாங் ஜெயாவில் இருந்தும் ஏராளமானோர் வார இறுதி நாட்களில் இந்தப் பூங்காவிற்கு வந்து பசுமைக்கு மத்தியில் ஓய்வெடுக்கின்றனர்.
கிளானா ஜெயா ஏரி
கிளானா ஜெயா ஏரியில் மீன்பிடிப்பதும் பிரபலமானது. பூங்காவில் ஒரு பொது நீச்சல் குளம், பூப்பந்து அரங்கம், ஹாக்கி மற்றும் டென்னிஸ் திடல்கள் போன்ற சமூக பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. 20,000 பேர் அமரக்கூடிய பெட்டாலிங் ஜெயா அரங்கமும் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்