காரகோரம்

காரகோரம்
பாக்கித்தானின் மத்திய காரகோரத்தில் காணப்படும் பால்டோரோ பனிப்பாறை
உயர்ந்த புள்ளி
உச்சிகே-2 கொடுமுடி பாக்கித்தான்
உயரம்8,611 m (28,251 அடி)
ஆள்கூறு35°52′57″N 76°30′48″E / 35.88250°N 76.51333°E / 35.88250; 76.51333
புவியியல்
காரகோரம் மற்றும் மத்திய ஆசியாவின் பிற எல்லைகள்
நாடுகள்ஆப்கானித்தான், சீனா, இந்தியா, பாக்கித்தான் and தஜிகிஸ்தான்
பகுதிகள்வடக்கு நிலங்கள், லடாக், சிஞ்சியாங் and படாக்சான்
தொடர் ஆள்கூறு36°N 76°E / 36°N 76°E / 36; 76
எல்லைகள்பாமிர் மலைகள், இந்து குஷ், குன்லுன் மலைத்தொடர், இமயமலை and லடாக் மலைத்தொடர்

காரகோரம் (Karakoram) என்பது பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது இமாலய மலைக்கு வடக்கே அமைந்துள்ளது. இது இமயமலையின் தொடர்ச்சி போல் காணப்பட்டாலும் உண்மையில் இது இமாலயத்தின் ஒரு பகுதி இல்லை.

உலகில் எவரெஸ்டுக்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள கே2 கொடுமுடிஎன்பது இம்மலைத் தொடரில்தான் அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பல கொடுமுடிகள் இங்கே உள்ளன. கே2வின் உயரம் எவரெஸ்டை விட 237 மீட்டர்கள் மட்டுமே குறைவு.

இம்மலைத் தொடர் ஏறக்குறைய 500 கிமீ (300 மைல்) நீளமுடையது. இப்புவியில் வடமுனை, தென்முனை தவிர்த்து மிகுந்த அளவில் பனி மூடிக் கிடக்குமிடம் காரகோரம் ஆகும். 70 கிமீ நீளமுள்ள சியாச்சென் பனியாறு 63 கிமீ நீளமுள்ள பியாபோ பனியாறும் இங்கு அமைந்துள்ளன. புவி வெப்பமாதலால் இமாலயப் பனியாறுகள் உருகி வரும் நிலையில் காரகோரத்துப் பனியோ இறுகி வருவதாக அறியப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!