காயத்ரி சங்கரன்
|
---|
|
பணி | பாடகர் |
---|
|
முனைவர் காயத்ரி சங்கரன் (Dr. Gayatri Sankaran ) இவர் ஓர் பார்வையற்ற இந்திய கருநாடக இசைக்கலைஞரும் மற்றும் வாய்ப்பாட்டுப் பாடகரும் ஆவார்.[1] கருநாடக பாடல் மற்றும் வயலின் இசைப்பதில் நிபுணத்துவம் பெற்றவராவார்.[2][3] இவர் தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் ஒரு பிரிவான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலிருந்து கலைமாமணி விருதைப் பெற்றவராவார்.[4][5] 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு இசையில் இவர் செய்த பங்களிப்புக்காக இந்தியக்குடிமகன்களின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[6] இந்த விருதைப் பெற்ற முதல் பார்வையற்ற பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
சுயசரிதை
முனைவர் காயத்ரி சங்கரன் ஒரு கருநாடக பாடகர், வயலின் இசை மற்றும் வீணை வாசிப்பதில் நிபுணராவார்.[7] ஆந்திராவின் சமல்கோட்டைச் சேர்ந்த இவர் நீண்ட காலமாக சென்னை திருவன்மியூரில் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று வயதில், தனது தாயார் சுப்புலட்சுமி குருநாதனிடமிருந்தும், பின்னர் அல்லாமராஜு சோமேசுவர ராவிடமிருந்தும் இசையைக் கற்கத் தொடங்கினார்.[3]
புகழ்பெற்ற நடனக் கலைஞர் ருக்மணி தேவி அருண்டேலால் ஈர்க்கப்பட்டு கலாசேத்திரவில் இசை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அங்கு இவர் புதுக்கோடு கிருட்டிணமூர்த்தி மற்றும் வைரமங்கலம் எஸ். லட்சுமிநாராயணன் ஆகியோரின் கீழ் கற்றுக் கொண்டார். பின்னர், குரல் மற்றும் வயலினில் சான்றிதழ் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] பக்கலா ராமதாசின் வழிகாட்டுதலின் கீழ் வயலின் கற்றுக்கொண்டார். பின்னர்,புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான கே.ஜே. யேசுதாஸ் மற்றும் லால்குடி ஜெயராமன் ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றார்.
பின்னர், இவர் ஒரு வயலின்-இசைக்கலைஞராக நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலியில் ஒரு பணியாளர் கலைஞராக சேர்ந்தார். மேலும் கர்நாடக இசையில் சிறந்த தர கலைஞராகவும், மெல்லிசை மற்றும் வயலினில் பி உயர் தர கலைஞராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதரின் ஸ்டைலிஸ்டிக் அனாலிசிஸ் என்ற தனது ஆய்வறிக்கையில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றுள்ளார். திருவான்மியூரில் உள்ள தனது வீட்டிலிருந்து நபர் மற்றும் இணையம் மூலமாக பல மாணவர்களுக்கு கருநாடக இசையினைக் கற்பிக்கிறார் [8][9]
பிரெயில்
இவர் இசைக்காக பிரெய்ல் குறியீடுகளை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[10] இவர் தென் மண்டல கலாச்சார மையம், கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் விருதுகள் தேர்வுக் குழு உறுப்பினராக உள்ளார்.[11]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் வரிசை செய்யப்பட்ட கலைஞரான காயத்ரி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாதிரிக்கான தேசிய விருது, இந்திய அரசு, சுர் சிங்கர் சம்சத்தின் சுர்மணி போன்ற பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். மும்பை, தென் சென்னையின் பன்னாட்டு சுழற் சங்கம் சார்பில் இசை சுடர், கிருட்டிண கான சபாவைச் சேர்ந்த சிறப்பு பல்லவி பாடகர், மரகதம் சந்திரசேகர் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த ஆசிரியர் விருது, கனடா இந்து கலாச்சார அமைப்பின் கனா குயில் விருது போன்ற பல விருதுகளையும் கெளரவங்களின் விருதினையும் பெற்றுள்ளார்.[2]
இந்தியன் நுண் கலை அமைப்பு விருது மூன்று முறை, உலக தெலுங்கு கூட்டமைப்பு விருது, பத்மா சாதனா விருது, அசெண்டாஸ் எக்ஸலன்ஸ் விருது மற்றும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து சுவர்ணா தரங்கிணி விருதையும் பெற்றுள்ளார். இந்திய அரசு 2006 ஆம் ஆண்டில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பத்மசிறீ விருதினை பெற்றுள்ளார்.[6] இந்த விருதைப் பெற்ற முதல் பார்வையற்ற பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இவருக்கு 2011 இல் கலைமாமணி என்ற விருதினை வழங்கியது.[4][5]
மேலும் காண்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்