கடல் மைல் (Nautical mile அல்லது Sea mile) என்பது ஒரு நீள அலகாகும். இது கிட்டத்தட்ட புவிமுனை இடைக்கோடு ஒன்றின் வழியே நிலவரைக்கோட்டின் ஒரு பாகைத்துளியைக் குறிக்கும்.
இது SI முறையற்ற ஓர் அலகாகும். குறிப்பாக கப்பற்துறையிலும், வானியலிலும் இது பெரிதும் பயன்பாட்டில் உள்ளது[1] பன்னாட்டுச் சட்டத்துறையிலும், பன்னாட்டு உடன்பாடுகளிலும், குறிப்பாக கடல் எல்லைகளை நிர்ணயிர்ப்பதற்கு பயன்படுகிறது.
வரைவிலக்கணம்
பன்னாட்டுத் தர அடிப்படையில் இதன் வரைவிலக்கணம்: 1 கடல் மைல் = 1,852 மீட்டர்கள்.[1]
குறியீடுகள்
கடல்மைல் அலகிற்கு பன்னாட்டுத் தரக் குறியீடு எதுவும் இல்லாத போதிலும் nmi என்ற குறியீடு விரும்பப்படுகிறது,[2].
குறிப்புகள்
வெளி இணைப்புகள்