கச்சான் (காற்று)

மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்று கச்சான் என அழைக்கப்படுகின்றது.

இலங்கையில் கச்சான் காற்று

இலங்கையில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று தெற்கு, மேற்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றாக வீசி மழையைப் பொழிந்த பின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வறண்ட கச்சான் காற்றாக வீசுகின்றது.

கச்சான் காற்று பற்றிய நம்பிக்கைகள்

கச்சான் காற்று வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வீசுவதாக நம்பப்படுகின்றது. வைகாசிக் கச்சான் பொய்யாமல் வீசும், ஆடிக்கச்சான் பாடி அடிக்கும், ஆவணிக் கச்சான் புரட்டி அடிக்கும்" என்பர்.

  • கச்சான் பற்றிய நாட்டார் பாடல்:
கச்சான் அடித்த பின்பு
காட்டில் மரம் நின்றது போல்
உச்சியில நாலு மயிர்
ஓரமெல்லாம் தான் வழுக்கை.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!