ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) ஏர் இந்தியாவின் துணையுடன் இயங்கக்கூடிய விமானசேவை ஆகும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேரளா மாநிலத்தினை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது. இது குறைந்த கட்டணத்துடன் செயல்படும் விமானசேவையாகும். மத்திய கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா நாடுகளுக்கு முக்கிய விமான சேவையினை இது வழங்குகிறது. இது முழுமையாக ஏர் இந்தியாவிற்கு சொந்தமானது. ஏர் இந்தியாவால் இந்தியர்களுக்கு தடையற்ற அனைத்து விமான சேவைகளையும் வழங்குவதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உருவாக்கப்பட்டது. தற்போது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு சுமார் 100 விமானங்களை இயக்குகிறது. இதில் தென்னிந்தியாவின் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா போன்றவற்றிலிருந்து செல்லும் விமானங்கள் முக்கியமானவை.
வரலாறு
மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் நோக்கோடு இந்தியாவிலிருந்து செல்லும் மக்களுக்காக, குறைந்த கட்டணத்துடன் செயல்படும் விமான சேவை வேண்டுமென நினைத்த ஒரு மலையாளியின் (கேரள மாநில மக்களுள் ஒருவர்) நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு மே 2004 ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 29, 2005 ல் திருவனந்தபுரம் முதல் அபுதாபி வரை தனது முதல் விமானத்தினை செலுத்தியதன் மூலம் விமான சேவையினைத் தொடங்கியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்க்கான முதல் விமானம் பிப்ரவரி 22, 2005 ல் வாங்கப்பட்டது. அப்போது புதிய ரக விமானமான போயிங்க் 737-86 Q ஒப்படைக்கப்பட்டது.
கார்ப்பரேட் விவரங்கள்
மும்பை, நரிமன் பாயிண்டில் உள்ள ஏர் இந்தியா கட்டிடத்தில் இதன் (ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்) தலைமை அலுவலகம் உள்ளது.[1] டிசம்பர் 2012 ல், ஏர் இந்தியாவின் இயக்குனர்கள் குழு அதன் தலைமை அலுவலகத்தினை கேரளா மாநிலத்திலுள்ள கொச்சிக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் தெரிவித்து, ஜனவரி 1, 2013[2] முதல் இம்முடிவு செயல்படுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாநில விமானசேவையின் மத்திய அமைச்சரான கே.சி.வேணுகோபால் இந்த தலைமை செயலக மாற்றம் ஒவ்வொரு கட்டமாக படிப்படியாக நடைபெறும் எனவும் புது வருட பிறப்பான ஜனவரி 1 (ஆண்டு?)[3] முதல் கொச்சியில் தலைமை அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இலக்குகள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பின்வரும் இடங்களை இலக்குகளாகக் கொண்டு செயல்படுகிறது (ஜூன் 2014 ன் படி).
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமான குழு 21, B737-800 ரக விமானங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு வகுப்பு பொருளாதரத்துடன் கூடிய 180 சீட்டுகளைக் கொண்டுள்ளது.[4]
விபத்துகள்
மே 22, 2010 ல் மங்களூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் விமானத்திலிருந்த 166 பேரில், 158 பேர் இறந்தனர். இதில் 152 பேர் பயணிகள் ஆவர்.[5][6][7][8][9]
குறிப்புகள்
↑"Contact Us". Air India Express. Head office address is: Air India Express Air - India Building, Nariman Point, Mumbai - 400 021, India.