எம்.கண்ணன் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் இந்தியவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றுகின்றார். 1991ல் இருந்து இந்த நிறுவனத்தின் தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வுகளுக்குப் பொறுப்பாளராக இருக்கின்றார். தமிழில் தலித் இலக்கியம் பற்றி பல கட்டுரை எழுதியுள்ளார். ஈழத்துக் கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுதிக்கு முக்கியமான அறிமுகக் கட்டுரை எழுதியிருக்கிறார். க்ரியாவின் தமிழகராதித் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தவர்.