என்.சி.ஏ.ஏ. என்னும் தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம் (ஆங்: National Collegiate Athletic Association) என்ற அமைப்பு அமெரிக்காவில் ஏறத்தாழ 1,200 அமைப்புகள், கல்லூரிகள், சங்கங்கள் உட்பட பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் விளையாட்டுகளை ஒழுங்குபடுகிறது. இண்டியனாபொலிஸ், இந்தியானாவில் என்.சி.ஏ.ஏ. தலைமைப் பணியிடங்கள் அமைந்தன. இவ்வமைப்பின் தலைவர் மைல்ஸ் பிரான்ட் ஆவார். என்.சி.ஏ.ஏ. உலகில் மிகப்பெரிய கல்லூரி விளையாட்டுச் சங்கமாகும். அமெரிக்காவின் கல்லூரி விளையாட்டுகள் பிரபலமானது காரணமாக வேறு நாடுகளின் கல்லூரி விளையாட்டுச் சங்கங்களவிட என்.சி.ஏ.ஏ.-யின் செல்வாக்கு மிகுந்தது. 1906இல் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது.