எனியாக் (Electronic Numerical Intergrator Analizer and Computer -ENIAC) என்பது இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்கப் படைத்துறையினரால் (ராணுவத்தினால்) உருவாக்கப்பட்ட ஒரு மின்னணுவியல்கணினி ஆகும். இராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் சார்ந்த தேவைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டது.[1][2][3]
இதுவே உலகின் முதல் முழுமையான மின்னணுவியல் கணினியாக கருதப்படுகிறது. இக்கணினியின் எடை 30 டன் (தொன்), நீளம் 100 அடி, உயரம் 8 அடி.
இதில் 17,468 வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tubes) பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக இதனை இயக்க 200 கிலோ வாட் மின்சாரம் தேவைப்பட்டது. அத்தோடு மிக அதிகளவான வெப்பத்தையும் வெளியிட்டது. இவ்வெப்பம் காரணமாக இதன் பகுதிகள் பழுதடைந்து விடுவதால் இது அடிக்கடி செயலிழந்தமை அக்காலத்தில் எனியாக்கின் முக்கிய போதாமைகளுள் ஒன்றாக இருந்தது.
இக்கணினி 1943 க்கும் 1945 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது.
↑Eckert Jr., John Presper and Mauchly, John W.; Electronic Numerical Integrator and Computer, United States Patent Office, US Patent 3,120,606, filed 1947-06-26, issued 1964-02-04; invalidated 1973-10-19 after court ruling in Honeywell v. Sperry Rand.