ஊனுண்ணி

ஓநாய்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து வட அமெரிக்க எருதுகளை தாக்குகின்றன. ஒநாய்கள் ஊனுண்ணி வகை விலங்குகள் ஆகும்.
புலி போன்ற விலங்குகள் பிற விலங்குகளின் இறைச்சியை உண்டு வாழ்வதால் ஊன் உண்ணிகள் என்னும் வகையைச் சேர்ந்த விலங்குகளாகும்.

ஊன் உண்ணிகள் (carnivore) என்பது பெரும்பாலும் பிற விலங்குகளின் இறைச்சியை மட்டுமே உணவாக உட் கொள்ளும் வகை விலங்குகள் ஆகும். சிங்கம், புலி முதலிய விலங்குகள் ஊனுண்ணிகள் ஆகும்.

ஊன் உண்ணிகளுக்கு கால் விரல்களில் கூர்மையான நகங்களும், வாயில் நீண்ட கூர்மையான கோரைப் பற்களும் இருக்கும். இவ்வகை ஊன் உண்ணிகளுக்கு, மேல் வாயில் உள்ள கடைவாய்ப் பற்களுக்கு முன்னதாக உள்ள நான்காவது பல்லானது தசையைக் கிழிக்க வல்லதாகக் கூரியதாகவும் பெரியதாகவும் இருக்கும். இதனை நாய்ப் பல், சிங்கப் பல் அல்லது புலிப்பல் என கூறுவர்.[1][2][3]

விலங்குகள் தமது உணவை உட்கொள்ளும் முறையைக் கொண்டு மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படும். அவையாவன தாவர உண்ணி, ஊனுண்ணி, அனைத்துண்ணி ஆகும். ஊனுண்ணிகளுக்கு நேர் மாறாக ஆடு, மாடு, எருமை, மான், யானை, குதிரை முதலிய விலங்குகள் தாவரங்களை உண்ணும் தாவர உண்ணி வகையைச் சார்ந்த விலங்குகளாகும்.

ஊன் உண்ணிகள் கொன்றுண்ணல் மூலமாகவோ, அல்லது தோட்டி வேலை மூலமாகவோ தமது உணவையும், ஆற்றலையும் பெறுகின்றன. ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுபவை பொதுவாக விலங்குகளாக இருப்பினும், பூச்சிகளைப் பிடித்து, சமிபாட்டுக்கு உட்படுத்தி தமது ஆற்றலைப் பெறும் தாவரங்களும் உள்ளன. அவை ஊனுண்ணும் தாவரங்கள் எனப்படும்.

ஊடகக் காட்சியகம்

ஊனுண்ணிகளின் பட்டியல்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Ullrey, Duane E. "Nutrient". Encyclopedia of Animal Science.
  2. Ullrey, Duane E. "Carnivores". Encyclopedia of Animal Science. Mammals.
  3. Ullrey, Duane E. "Omnivores". Encyclopedia of Animal Science. Mammals.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!