உமாரியா (Umaria) நகரம் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது உமாரியா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரானது மத்தியப் பிரதேசத்தின் கோட்டங்களுள் ஒன்று.
அமைவிடம்
இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 538 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்தொகை
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 26,837 ஆகும்.[1] இதில் ஆண்கள் 53% பேரும் பெண்கள் 47% பேரும் அடங்குவர். இந்நகரின் கல்வியறிவு 69% ஆகும். இந்நகர மக்கட்தொகையில் 14% பேர் ஆறு வயதிற்குட்பட்டவர்கள்.
மேற்கோள்கள்