உடனுறை துணை

ஆங்கிலத்தில் கன்சர்ட் (consort) என்று வழங்கப்படும் சொல்லிற்கு இணையாக உடனுறை துணை என்று கூறலாம். ஓர் நாட்டு அரசன் அல்லது அரசியின் வாழ்க்கைத்துணை அல்லது தோழர் இவ்வாறு அழைக்கப்படுகிறார். உடனுறை துணைவருக்கு அரச அடுக்கதிகாரத்தில் சற்றே குறைந்த மதிப்பு வழங்கப்படும். மேலும் பொதுவாக இவருக்கு அரியணை ஏறும் உரிமை இருக்காது.

இந்தியப் பண்பாட்டில் பட்டத்தரசி அல்லது பட்ட மகிஷி என அழைக்கப்படுகின்றனர். ஆண் துணைவருக்கு தனியான பெயர் இல்லை.

கடவுளரின் வாழ்க்கைத் துணைவியரும் கன்சர்ட் என்றே ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகின்றனர். தமிழில் இருவரையும் ஒருசேரக் குறிப்பிட, எடுத்துக்காட்டாக, “கற்பகாம்பாள் உடனுறை கபாலிசுவரர்” எனக் குறிப்பிடுகின்றனர்.

உடனுறைப் பெயர்கள்

அரச குடும்பத்தில் சில உடனுறை துணைவருக்கு வழங்கப்படும் சில பட்டங்கள்

  • அரசாளும் மன்னனின் மனைவிக்கு உடனுறை அரசி அல்லது பட்டத்தரசி
  • அரசாளும் அரசியின் கணவருக்கு உடனுறை அரசர்
  • அரசாளும் இளவரசியின் கணவர் அல்லது சிலநேரங்களில் அரசாளும் அரசியின் கணவருக்கு உடனுறை இளவரசர்
  • அரசாளும் இளவரசரின் மனைவி அல்லது சிலநேரங்களில் அரசாளும் மன்னனின் மனைவிக்கு உடனுறை இளவரசி

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!