இரண்டாம் ஜெகதேகமல்லன்

இரண்டாம் ஜெகதேகவமல்லன் (Jagadhekamalla II, ஆட்சிக்காலம் 1138-1151 ) மூன்றாம் சோமேசுவரனைத் தொடர்ந்து மேலைச் சாளுக்கிய அரியணை ஏறியவன். இவனது ஆட்சியின்போது சாளுக்கியப் பேரரசு மெதுவாக சரிவு காண ஆரம்பித்தது. வேங்கியை முழுவதுமாக இழக்கவேண்டி இருந்தது என்றாலும், தெற்கில் போசளர்களையும், வடக்கில் சீனு, பரமர மரபுகளை இவனால் இன்னும் கட்டுப்படுத்த முடிந்தது. இவன் கன்னட இலக்கண ஆசிரியரான இரண்டாம் நாகவர்மனை ஆதரித்தான். இரண்டாம் நாகவர்மன் காவியவலோகன்னா, கர்நாடகா பாஷாபூஷசனா போன்றப் பல பிரபலமான நூல்களை எழுதியவர். இரண்டாம் ஜெகதேகமல்லன் தானே சமஸ்கிருதத்தில் சங்கீதசூடாமணி (Sangithachudamani) என்ற இசைப் படைப்பை யாத்தான்.[1]

மேற்கோள்

  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).

மேற்கோள்கள்

  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 52–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!