இசுமாயில் சப்ரி அமைச்சரவை அல்லது மலேசியாவின் 22-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Ismail Sabri; ஆங்கிலம்: Ismail Sabri Cabinet; சீனம்: 沙比里内阁); என்பது மலேசியப் பிரதமர்இசுமாயில் சப்ரி யாகோப் தலைமையிலான மலேசியாவின் 22-ஆவது அமைச்சரவை ஆகும்.[1]
2021 ஆகத்து 21-ஆம் தேதி, மலேசியாவின் 9-ஆவது பிரதமராக டத்தோ ஸ்ரீஇசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) நியமிக்கப்பட்ட பின்னர், 2021 ஆகத்து 30-ஆம் தேதி, இந்த 22-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.[2]. இந்த அமைச்சரவை மலேசிய குடும்ப அமைச்சரவை (Malaysian Family Cabinet) என்றும் அழைக்கப்படுகிறது.[3][4]
பொது
இந்த அமைச்சரவையின் நிர்வாகம் 4 முக்கிய அரசியல் கூட்டணிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது.
பெரும்பான்மை ஆதரவை இழந்த பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கம், அதை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் பொதுவான நல்ல ஒரு முடிவைக் காண முடியவில்லை. அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், பிரதமர் முகிதீன் யாசின் அமைச்சரவை (Muhyiddin Cabinet) 16 ஆகத்து 2021-இல் பதவி துறப்பு செய்தது.[13][14]
இசுமாயில் சப்ரியின் அரசாங்கம் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding) கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் அப்போதைக்கு ஒரு வலுவான அரசியல் உறுதிபாட்டிற்கான (Political Stability) முயற்சியாகும்.[17]
துணைப் பிரதமர் பதவியில் வெற்றிடம்
2021 ஆகத்து 27-ஆம் தேதி, இசுமாயில் சப்ரி 32 அமைச்சர்கள் மற்றும் 38 துணை அமைச்சர்கள் கொண்ட தன் அமைச்சரவையை அறிவித்தார். துணைப் பிரதமர் பதவி காலியாக இருந்தது. மாறாக, அத்தகைய தேவை ஏற்பட்டால், பிரதமர் இசுமாயில் சப்ரி இல்லாத நேரத்தில், மூத்த அமைச்சர்கள் பிரதமருக்காகப் பிரதிநிதித்துவம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.