மணி தருமபுரி பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர் 1987 முதல் திமுக உறுப்பினராக உள்ளார். 2016 முதல் 2019 வரை தருமபுரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 2020 முதல் 2022 வரை மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக இருந்தார். 2023ஆம் ஆண்டு துருமபுரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்துவருகிறார். 2019 ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[1]2024 இந்தியப் பொதுத் தேர்தலில்தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]