ஆவலம்பட்டி (Avlampatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது தாசிரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 30 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 143 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகை 535 ஆகும். இதில் 257 ஆண்களும் 278 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள்