அமாரில்லிடேசியே (தாவர வகைப்பாட்டியல்: Amaryllidaceae) ஒரு விதையிலைத் தாவரக் குடும்பங்களில் இது ஒன்றாகும். இக்குடும்பத்தில் 86 பேரினங்களும், 1310 சிற்றினங்களும் இருக்கின்றன. இவை வெப்பமண்டலப் பகுதிகளிலும் (Species) மிதவெப்பமண்டலப் பகுதிகளிலும் (Tropics) பரவியுள்ளன. தென்னிந்தியாவில் 5 பேரினங்களும் 9 சிற்றினங்களும் இருக்கின்றன.
பொதுப்பண்புகள்
இவை பொதுவாக வறண்ட நிலத் தாவரங்கள் (Xerophytes) இத்தாவரங்கள் பொதுவாக மட்டநிலத்தண்டு (Rhizome) தண்டடிக்கிழங்கு (Corm) குமிழ்த்தண்டுகளை (Bulbs) உடைய பல பருவச் செடிகளாகும். இலைகள் நீண்டோ, பட்டை போன்றோ அரிவாள் போன்றோ இருக்கும். சில நார்களுடன் வலுவாக இருக்கும். இலைகள் வசந்த அல்லது மழைக் காலங்களில் மட்டும் தோன்றுகின்றன. மலர்கள் தனியாகவோ, ரெசிம் (Raceme) குடை மஞ்சரி (Umbel) அல்லது பேனிக்கிள் (Panicle) மஞ்சரியாகவோ அமைந்திருக்கும். மலர்கள் இருபாலானவை (Bisexual) ஆரச்சமச்சீர் (Actinomorphic ) அல்லது இருபக்கச் சமச்சீரானவை (Zygomorphic) பூவிதழ்கள் () 3+3 ஆக இருவட்டங்களில் அமைந்திருக்கும் சிலவற்றில் வளர்வட்டம் (Corona) பேரினங்களைப் பொறுத்துப் பூவிதழ்கள் மகரந்தத் தாள்கள் ஆகியவற்றிற்கிடையே வெவ்வேறு வடிவத்தில் அமைந்திருக்கும். மகரந்தத் தாள்கள் 3+3 என இருவட்டங்களில் அமைந்திருக்கும். சூற்பை கீழ்மட்டத்திலிருக்கும் (Inferior) அது மூன்று அறைகளைக் கொண்டது. சூல்கள் (Ovules) அச்சுச்சூல் அமைவுடையவை (Axileplacentation) கனி காப்சூல் (Capsule) அல்லது பெரிய வகையைச் சார்ந்தது. விதைகள் முளைசூழ் சதையுடையவை (Endospermous).
பொருளாதாரச் சிறப்பு
ஏறக்குறைய இதன் 500 சிற்றினங்கள் அழகுத் தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. நிலச்சம்பங்கி, (Polyanthes tuberose) விஷமூங்கில் (Crinum asiaticum ) பேன்கிரேஷியம் மேரிடைமம் டாஃபடில்ஸ் ( Narcissus psuedonarcissus; Daffodils) ஹீமாந்தஸ், ஹைமனோக்காலிஸ் ஹீப்பியாஸ்ட்ரம் () ஸெஃபராந்தஸ் (Zephyranthes spp) அமாரில்லிஸ் (Amaryllis spp) முதலியன அழகுத் தாவரங்களாக வளா;க்கப்படுகின்றன. தவறாக நூற்றாண்டுச் செடி என்று கூறப்படுகின்ற இரயில் கற்றாழை மண் அரிப்பைத் தடுப்பதற்கும் இலைகளிலிருந்து நார் எடுப்பதற்கும் பயன்படுகின்றது. குபன் அல்லது மெளாரிஷியன் ஃபா;க்கிரேயாவின் ) சிற்றினங்களிலிருந்து எடுக்கப்படுகின்றது. இலத்தீன் அமெரிக்காவில் அகேவின் சர்க்கரைச் சாறிலிருந்து மெஸ்கல் ( Tequila)டெக்குல்லா என்னும் மதுபானங்கள் தயார் செய்கின்றார்கள். இதுபோன்று பல்க் (Pulque) என்ற ஒருவகை மதுபானத்தையும் அதை நொதிக்க வைத்துத் தயார் செய்கின்றார்கள்.