அபராசித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னனாவான். ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சி புரிந்த அபராசிதன் கிபி 880-897 ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான். அதன்பிறகு சோழற்களுக்கு போரின் வெற்றி பரிசாக தனி ஆளுமையை வழங்கிய அபராசிதபல்லவன, சில ஆண்டுகளில் சோழர்களினால் வேறொரு போரில் வீழ்த்தப்பட்டான்.அவனோடு தொண்டைமண்டல பல்லவர் ஆட்சி முடிவுற்றது.
[1]
மேற்கோள்கள்
- ↑ Encyclopaedia of the Hindu world, Volume 2
By Gaṅgā Rām Garg pp548