அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்(ஐஏடிஏ: HDY, ஐசிஏஓ: VTSS) (ஆங்கிலம்: Hat Yai International Airport; மலாய்: Lapangan Terbang Antarabangsa Hat Yaiதாய் மொழி: ท่าอากาศยานหาดใหญ่; Tha-akatsayan Hatyai) என்பது தெற்கு தாய்லாந்து, சொங்கலா மாநிலம்அட் யாய் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.
இந்த வானூர்தி நிலையம் தாய்லாந்து வானூர்தி நிலையங்கள் நிறுவனம், (Airports of Thailand Public Company Limited (AOT) எனும் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ஓர் ஆண்டுக்கு ஏறக்குறைய 1.5 மில்லியன் பயணிகள், 9,500 விமானங்கள், 12,000 டன் சரக்குகள் ஆகியவற்றைக் கையாளுகிறது.
பொது
கடல் மட்டத்தில் இருந்து 28 மீ. உயரத்தில் உள்ள இந்த வானூர்தி நிலையம் அட் யாய் நகரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. நெடுஞ்சாலை 4135 (Sanambin Panij Road) எனும் முதன்மைச் சாலையுடன் இந்த வானூர்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வானூர்தி நிலையத்தின் சேவை நேரம் 06:00 – 24:00. இதன் ஓடுபாதை ஒரு மணி நேரத்திற்கு 30 விமானங்களைக் கையாள முடியும். அத்துடன் அதன் தாங்கும் ஆற்றல் PCN 60/F/C/X/T என மதிப்பிடப்படுகிறது. அதன் பரப்பளவு 56,461 மீ2.
விரிவாக்கம்
அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் 2.5 மில்லியன் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதனால், விரிவாக்கத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2018-ஆம் ஆண்டில் ஏற்கனவே 4.5 மில்லியன் பயணிகளை இந்த வானூர்தி நிலையம் கண்டுள்ளது. இந்த மேம்படுத்தல், 2030-ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகளுக்குச் சேவை செய்யும். அந்த வகையில் வானூர்தி நிலையத்தின் கொள்ளாற்றல் திறனும் விரிவுபடுத்தப்படுகின்றது.[1]
2005 ஏப்ரல் 3-ஆம் தேதி, அட் யாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பயணிகள் புறப்படும் முனையத்தில் ஒரு வெடிகுண்டு விபத்து நிகழ்ந்தது. 2005 சொங்கலா குண்டுவெடிப்பு (2005 Songkhla Bombings) என்று குறிப்பிடப்படும் அந்த வெடிகுண்டு விபத்திற்கு, பட்டானி பிரிவினைவாதிகள் (Pattani Separatists) காரணம் என்றும் சொல்லப்பட்டது. அந்த விபத்தில் ஒரு பயணி கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயம் அடைந்தனர்.[4]