ஃபலேசு இடைப்பகுதி

ஃபலேசு இடைப்பகுதி
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

ஃபலேசு பகுதித் தாக்குதல்கள்( 8–17 ஆகஸ்ட் 1944); நேச நாட்டுத் தாக்குதல்கள் நீல நிற அம்புக்குறிகளாலும், ஜெர்மானியத் தாக்குதல்கள் சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன
நாள் 12–21 ஆகஸ்ட் 1944
இடம் நார்மாண்டி, பிரான்சு
தெளிவான நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய இராச்சியம்
 கனடா
போலந்து
 பிரான்சு
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி
ஐக்கிய அமெரிக்கா ஒமார் பிராட்லி
கனடா ஹாரி செரார்]
ஐக்கிய இராச்சியம் மைல்ஸ் டெம்சி
ஐக்கிய அமெரிக்கா கோர்ட்னி ஹோட்ஜஸ்
ஐக்கிய அமெரிக்கா ஜார்ஜ் பேட்டன்
நாட்சி ஜெர்மனி குந்தர் வோன் குளூக்
நாட்சி ஜெர்மனி வால்டர் மோடல்
நாட்சி ஜெர்மனி பால் ஹாசர்
நாட்சி ஜெர்மனிஹைன்ரிக் எபெர்பாக்
பலம்
<= 17 டிவிசன்கள் 14–15 டிவிசன்கள்
<= 100,000 வீரர்கள்
இழப்புகள்
தெரியவில்லை (ஆனால் அதிகமானவை) ~60,000

ஃபலேசு இடைப்பகுதி சண்டை (Battle of the Falaise pocket) இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சில் நேச நாட்டுப் படைகள் ஃபலேசு நகர் அருகெ பல ஜெர்மானியப் படைப்பிரிவுகளைச் சுற்றி வளைத்து சரணடையச் செய்தன.

பிரான்சு மீதான நேசநாட்டுக் கடல்வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ல் நார்மாண்டிப் பகுதியில் துவங்கியது. இரு மாதங்கள் சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகளை முறியடித்து நேசநாட்டுப் படைகள் பிரான்சின் உட்பகுதியை நோக்கி முன்னேறத் தொடங்கின. இந்த முன்னேற்றத்தைத் தடுக்க ஜெர்மானியர்கள் ஆகஸ்ட் முதல்வாரத்தில் லியூட்டிக் நடவடிக்கையை மேற்கொண்டனர். நேச நாட்டுப் படைகளைத் தடுத்து நிறுத்த போதுமான படைபலமும், ஆயுத பலமும் இல்லாத நிலையில் இட்லர் தன் தளபதிகளின் எதிர்கருத்துகளைப் புறந்தள்ளி இத்தாக்குதலை மேற்கொள்ள ஆணையிட்டார். தோல்வியில் முடிவடைந்த இத்தாக்குதலால், ஜெர்மானிய 7வது மற்றும் 5வது கவச ஆர்மிகளின் பல படைப்பிரிவுகள் நேச நாட்டுப் படைகளால் சுற்றி வளைக்கப்படும் நிலை உருவானது. லியூட்டிக் தாக்குதலில் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் நேச நாட்டுப் படை நிலைகளை ஆழமாக ஊடுருவித் தாக்கியதால், தாக்குதல் முறியடிக்கப்பட்டவுடன் முப்புறமும் எதிரிப்படைகளால சூழப்பட்டு சிக்கிக் கொண்டன. நேச நாட்டுப் படைநிலைகளின் இடையே ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி ஃபலேசு வீக்கப்பகுதி (Falaise Gap) என்று அழைக்கப்பட்டது. வடக்கில் கனடியப் படைகளும், மேற்கில் பிரிட்டானிய 2வது ஆர்மியும், தெற்கில் அமெரிக்க 1வது ஆர்மியும் இவ்வீக்கப்பகுதியை சூழ்ந்திருந்தன.

ஃபலேசு வீக்கப்பகுதியினை நான்காவது புறமும் சூழ்ந்து ஜெர்மானியப் படைப்பிரிவுகளைச் சுற்றி வளைக்க நேச நாடுகள் டிராக்டபிள் நடவடிக்கையை மேற்கொண்டன. தப்பும் வழி அடைபடும் முன்னர் ஃபலேசு வீக்கப்பகுதியிலிருந்து தப்ப ஜெர்மானியர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில், நேச நாட்டுப் படைகள் மெல்ல மெல்ல அவ்வழியை அடைத்தன. ஆகஸ்ட் 21ம் தேதி ஃபலேசிலிருந்து ஜெர்மானியப் படைப்பிரிவுகள் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டு வீக்கப்பகுதி இடைப்பகுதியாக (pocket) மாறிவிட்டது. சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே பல ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ஃபலேசிலிருந்து தப்பினாலும் இறுதியாக சுமார் 50,000 வீரர்கள் இடைப்பகுதியில் சிக்கிக் கொண்டு சரணடைந்தனர். இதனால் செய்ன் ஆற்றுக்கு மேற்கே இருந்த ஜெர்மானியப் படைகள் முற்றிலுமாக சீர் குலைந்தன. வீரர்களையும், தளவாடங்களையும் பெருமளவில் இழந்திருந்த ஜெர்மானியப் படைகளால் இதற்கு மேல் நேச நாட்டு படைகளைச் சமாளிக்க முடியவில்லை. அடுத்த பத்து நாட்களுள் பாரிசு நகரம் வீழ்ந்து ஓவர்லார்ட் நடவடிக்கை முழுமையடைந்தது.

வெளி இணைப்புகள்


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!